558 | இமையாது உயிராது இருந்தாய், போற்றி! என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி! உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி! ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி! அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி! ஆதி புராணனாய் நின்றாய், போற்றி! கமை ஆகி நின்ற கனலே, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |