Try error :java.sql.SQLException: Closed Resultset: next
593கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும், கரி
                காட்டில் எரி ஆடும் கடவுளாரும்,
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும்,
               பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்,
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த
             திருப் புன்கூர் மேவிய செல்வனாரும்,
மெய் எலாம் வெண்நீறு சண்ணித்தாரும் வெண்ணி
              அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.