623 | நினைத்தவர்கள் நெஞ்சுளாய்! வஞ்சக் கள்வா! நிறை மதியம் சடை வைத்தாய்! அடையாது உன்பால் முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரியச் செற்றாய்! முன் ஆனைத் தோல் போர்த்த முதல்வா! என்றும் கனைத்து வரும் எருது ஏறும் காளகண்டா! கயிலாயமலையா! நின் கழலே சேர்ந்தேன்; அனைத்து உலகும் ஆள்வானே! ஆனைக்காவா! அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?. |