624 | இம் மாயப் பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து- இடைச் சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம், கைம் மான, மனத்து உதவி, கருணை செய்து, காதல் அருள் அவை வைத்தாய்! காண நில்லாய்! வெம் மான மதகரியின் உரிவை போர்த்த வேதியனே! தென் ஆனைக்காவுள் மேய அம்மான்! நின் பொன் பாதம் அடையப்பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?. |