64 | செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், சிற்றேமமும், பெருந் தண் குற்றால(ம்)மும், தில்லைச் சிற்றம்பலமும், தென்கூட(ல்)லும், தென் ஆனைக்காவும், சிராப்பள்ளி(ய்)யும், நல்லூரும், தேவன்குடி, மருக(ல்)லும், நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்- கல்லலகு நெடும்புருவக் கபாலம் ஏந்திக் கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே. |