711புலி வலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம்,
                       பூவணம், பொய்கை நல்லூர்,
வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி,
                        வாஞ்சியம், மருகல், வன்னி
நிலம் மலி நெய்த்தானத்தோடு, எத்தானத்தும்
       நிலவு பெருங்கோயில், பல கண்டால், தொண்டீர்!
கலி வலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற
                 கயிலாய நாதனையே காணல் ஆமே.