716பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும்
         பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும்
கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்,
      கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்
          இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்,
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து,
         தாழ்ந்து, இறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே.