78நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன்
     காண், ஞானப் பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன் காண், புண்ணியன் காண், புராணன் தான்
   காண், புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன் தான்காண்,
சாரணன் காண், சந்திரன் காண், கதிரோன் தான்
 காண், தன்மைக் கண்-தானேகாண், தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன்
                  காண்;அவன் என் கண் உளானே.