95 | கல்லலகு தாம் கொண்டு, காளத்தி(ய்)யார், கடிய விடை ஏறி, காணக்காண இல்லமே தாம் புகுதா, “இடுமின், பிச்சை!” என்றாருக்கு எதிர் எழுந்தேன்;எங்கும் காணேன்; “சொல்லாதே போகின்றீர்;உம் ஊர் ஏது? துருத்தி? பழனமோ? நெய்த்தான(ம்)மோ?” அல்லலே செய்து அடிகள் போகின்றார், தாம்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!. |