953நிலா மாலை செஞ்சடை மேல் வைத்தது உண்டோ?
        நெற்றி மேல் கண் உண்டோ? நீறு சாந்தோ?
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ?
     பூதம் தற் சூழ்ந்தனவோ? போர் ஏறு உண்டோ?
கலாம் மாலை வேல் கண்ணாள் பாகத்து உண்டோ?
        கார்க் கொன்றை மாலை கலந்தது உண்டோ?
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ?
           சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே.