Try error :java.sql.SQLException: Closed Resultset: next
964வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்;
              “மாதேவா! மாதேவா!” என்று வாழ்த்தி,
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்; நீறு
              அணியும் கோலமே நிகழப் பெற்றோம்;
கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக் கல்
           மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்;
பார் ஆண்டு பகடு ஏறித் திரிவார் சொல்லும் பணி
           கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.