164 | ஐ-இரண்டும், ஆறு ஒன்றும், ஆனார் போலும்; அறு-மூன்றும், நால்-மூன்றும் ஆனார் போலும்; செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும்; திசை அனைத்தும் ஆய் நிறைந்த செல்வர் போலும்; கொய் மலர் அம் கொன்றைச் சடையார் போலும்; கூத்து ஆட வல்ல குழகர் போலும்; எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. |