147 | குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார்; குரு மணி சேர் மலை வைத்தார்; மலையைக் கையால் உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒருவிரலால் உற வைத்தார்; “இறைவா!” என்று புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்; புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்; நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. |