675நல்லானை, நரை விடை ஒன்று ஊர்தியானை, நால்
              வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டாச்
சொல்லானை, சுடர் மூன்றும் ஆனான் தன்னை,
   தொண்டு ஆகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை,
வில்லானை, மெல்லியல் ஓர் பங்கன் தன்னை,
           மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க-
கில்லானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
              கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.