516 | அஞ்சைக்களத்து உள்ளார்; ஐயாற்று உள்ளார்; ஆரூரார்; பேரூரார்; அழுந்தூர் உள்ளார்; தஞ்சைத் தளிக்குளத்தார்; தக்களூரார்; சாந்தை அயவந்தி தங்கினார் தாம்; நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர்; நாகேச்சுரத்து உள்ளார்; நாரையூரார்; வெஞ்சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே. |