237 | ஆடல் மால்யானை உரித்தான் கண்டாய்; அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்; கோடியான் கண்டாய்; குழகன் கண்டாய்; குளிர் ஆரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்; நாடிய நன்பொருள்கள் ஆனான் கண்டாய்; நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |