285 | முடி ஆர் மதி, அரவம், வைத்தார்போலும்; மூ உலகும் தாமே ஆய் நின்றார்போலும்; செடி ஆர் தலைப் பலி கொண்டுஉழல்வார்போலும்; செல் கதிதான் கண்ட சிவனார்போலும்; கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட கண்டர்போலும்; கங்காளவேடக் கருத்தர்போலும்; அடியார் அடிமை உகப்பார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |