28குண்டு ஆக்கனாய் உழன்று, கையில் உண்டு,
         குவிமுலையார்தம் முன்னே நாணம் இன்றி,
உண்டி உகந்து, அமணே நின்றார் சொல் கேட்டு,
 உடன் ஆகி, உழி தந்தேன், உணர்வு ஒன்று இன்றி;
வண்டு உலவு கொன்றை அம்கண்ணியானை,
            வானவர்கள் ஏத்தப்படுவான் தன்னை,
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை-
         ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!