Try error :java.sql.SQLException: Closed Resultset: next
629கொடி ஏயும் வெள் ஏற்றாய்! கூளி பாட, குறள் பூதம்
                         கூத்து ஆட, நீயும் ஆடி,
வடிவு ஏயும் மங்கை தனை வைத்த மைந்தா! மதில்
                 ஆனைக்கா உளாய்! மாகாளத்தாய்!
படி ஏயும் கடல் இலங்கைக் கோமான் தன்னைப்
       பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த
அடியே வந்து, அடைந்து, அடிமை ஆகப் பெற்றால்,
     அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.