Try error :java.sql.SQLException: Closed Resultset: next
622ஒப்பு ஆய், இவ் உலகத்தோடு ஒட்டி வாழ்வான்,
       ஒன்று அலாத் தவத்தாரோடு உடனே நின்று,
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி, நற்று உன்
         திறம் மறந்து திரிவேனை, காத்து, நீ வந்து
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி, என்னை
     ஆண்டவனே! எழில் ஆனைக்காவா! வானோர்
அப்பா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
   அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.