756வார் ஆரும் முலை மங்கை பங்கத்தான் காண்;
    மாமறைகள் ஆயவன் காண்; மண்ணும், விண்ணும்,
கூர் ஆர் வெந்தழலவனும், காற்றும், நீரும்,
    குலவரையும், ஆயவன் காண்; கொடு நஞ்சு உண்ட
கார் ஆரும் கண்டன் காண்; எண்தோளன் காண்,
   கயிலை மலைப்-பொருப்பன் காண் விருப்போடு என்றும்
தேர் ஆரும் நெடுவீதித் திருப் புத்தூரில்-திருத்
           தளியான் காண்; அவன் என் சிந்தையானே.