Try error :java.sql.SQLException: Closed Resultset: next
85இறையவன் காண்;ஏழ் உலகும் ஆயினான்காண்;
        ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்;
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண்;
       குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்;
மறை உடைய வானோர் பெருமான் தான் காண்;
        மறைக்காட்டு உறையும் மணிகண்டன் காண்;
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் -
         காளத்தியான் அவன், என் கண் உளானே.