890 | தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள் செய்வானை; சுடர் மழுவாள் படையானை; சுழி வான் கங்கைத் தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை; செக்கர் வான் ஒளியானை; சேராது எண்ணிப் பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து, தலை அறுத்து, பல் கண் கொண்ட கண்டகனை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!. |