905 | அறம் தெரியா, ஊத்தைவாய், அறிவு இல் சிந்தை ஆரம்பக் குண்டரோடு, அயர்த்து நாளும் மறந்தும் அரன் திருவடிகள் நினைய மாட்டா மதி இலியேன் வாழ்வு எல்லாம் வாளா; மண்மேல் பிறந்த நாள் நாள் அல்ல, வாளா; ஈசன் பேர் பிதற்றிச் சீர் அடிமைத் திறத்து உள் அன்பு செறிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே. |