906 | அறிவு இலங்கு மனத்தானை, அறிவார்க்கு அன்றி அறியாதார் தம் திறத்து ஒன்று அறியாதானை, பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை, பொரு திரைவாய் நஞ்சம் உண்ட குறி இலங்கு மிடற்றானை, மடல்-தேன் கொன்றைச் சடையானை, மடைதோறும் கமலம் மென் பூச் செறி எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே. |