209 | குன்றாத மா முனிவன் சாபம் நீங்கக் குரை கழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை, அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல் வாய் ஓட்டி அடர்வித்தானை, சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்தன்னை, “சிவன் எம்பெருமான்” என்று இருப்பார்க்கு என்றும் நன்று ஆகும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே!. |