Try error :java.sql.SQLException: Closed Resultset: next
27ஆறு ஏற்க வல்ல சடையான் தன்னை; அஞ்சனம்
                     போலும் மிடற்றான் தன்னை;
கூறு ஏற்க, கூறு அமர, வல்லான் தன்னை; கோல்
              வளைக்கை மாதராள் பாகன்தன்னை;
நீறு ஏற்கப் பூசும் அகலத்தானை; நின்மலன் தன்னை;
                              நிமலன் தன்னை;
ஏறு ஏற்க ஏறுமா வல்லான் தன்னை;- ஏழையேன்
                    நான் பண்டு இகழ்ந்த ஆறே!