Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.39 திருமழபாடி
திருத்தாண்டகம்
391நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல்
                ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்;
கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்;
  கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்;
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும்
                  ஏழ்மலையும் ஆனான் கண்டாய்;
மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய்
                 மழபாடி மன்னும் மணாளன்தானே.