Try error :java.sql.SQLException: Closed Resultset: next
454வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார், வாழ்த்துவார்,
                               வந்து நிற்பார்,
“எல்லை எம்பெருமானைக் காணோம்” என்ன, எவ் ஆற்றால்
                       எவ்வகையால் காணமாட்டார்;
நல்லார்கள் நால் மறையோர் கூடி நேடி, “நாம் இருக்கும் ஊர்
                       பணியீர், அடிகேள்!” என்ன,
“ஒல்லை தான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர்”
                             என்கின்றாரே.