Try error :java.sql.SQLException: Closed Resultset: next
979நெய் ஆடி! நின்மலனே! நீலகண்டா! நிறைவு
             உடையாய்! மறை வல்லாய்! நீதியானே!
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே! மான் தோல்
                    உடையாய்! மகிழ்ந்து நின்றாய்!
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு,
                அடியேன் நான் இட்டு, கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன்-பூம் புகலூர்
                           மேவிய புண்ணியனே!.