529 | ஈங்கைப் பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண்; எம்மான்காண்; கைம்மாவின் உரி போர்த்தான் காண்; ஓங்கு மலைக்கு அரையன் தன் பாவையோடும் ஓர் உரு ஆய் நின்றான் காண்; ஓங்காரன் காண்; கோங்கு மலர்க்கொன்றை அம்தார்க் கண்ணியான் காண்; கொல் ஏறு வெல் கொடிமேல் கூட்டினான் காண்; வேங்கை வரிப் புலித்தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |