290 | திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை, தீம்கரும்பின், இன்சுவையை, தெளிந்த தேறல், குருமணியை, குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை, பரு மணியை, பவளத்தை, பசும்பொன், முத்தை, பருப்பதத்தில் அருங்கலத்தை, பாவம் தீர்க்கும் அருமணியை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |