392 | கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்; கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்; அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய்; அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்; அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்; மற்று இருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |