6.73 திருவலஞ்சுழியும்,
திருக்கொட்டையூர்க் கோடீச்சுரமும்
திருத்தாண்டகம்
724கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;
             கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்;
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய்;
               பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்;
வரு மணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;
                மாதேவன் கண்டாய்; வரதன் கண்டாய்
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில்
              கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.