740தக்கனது வேள்வி கெடச் சாடினானை, தலை
             கலனாப் பலி ஏற்ற தலைவன் தன்னை,
கொக்கரை சச்சரி வீணைப் பாணியானை,
    கோள் நாகம் பூண் ஆகக் கொண்டான் தன்னை,
அக்கினொடும் என்பு அணிந்த அழகன் தன்னை,
   அறுமுகனோடு ஆனை முகற்கு அப்பன் தன்னை,
நக்கனை, வக்கரையானை, நள்ளாற்றானை,
            நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.