771குழை ஆர் திருத்தோடு காதில் கண்டேன்;
        கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்;
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன்; ஏழ்
              இசை யாழ், வீணை, முரலக் கண்டேன்;
தழை ஆர் சடை கண்டேன்; தன்மை கண்டேன்;
             தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்;
மழை ஆர் திருமிடறும் மற்றும் கண்டேன்-
             வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.