805 | கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்; கல் மதில் சூழ் கந்த மாதனத்தான் கண்டாய்; மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய்; மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்; விண்தலம் சேர் விளக்கு ஒளி ஆய் நின்றான் கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்; கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. |