307 | பொன் நலத்த நறுங்கொன்றைச் சடையினான்காண்; புகலூரும் பூவணமும் பொருந்தினான்காண்; மின் நலத்த நுண் இடையாள் பாகத்தான்காண்; வேதியன்காண்; வெண்புரிநூல் மார்பினான்காண்; கொல்-நலத்த மூ இலை வேல் ஏந்தினான்காண்; கோலமா நீறு அணிந்த மேனியான்காண்- செந் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |