36 | செய்யனே; கரியனே, கண்டம்; பைங்கண் வெள் எயிற்று ஆடு அரவனே; வினைகள் போக வெய்யனே; தண் கொன்றை மிலைத்த சென்னிச் சடையனே; விளங்கு மழுச் சூலம் ஏந்தும் கையனே; காலங்கள் மூன்று ஆனானே; கருப்பு வில் தனிக் கொடும் பூண் காமற் காய்ந்த ஐயனே; பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே. |