170 | மங்குல் மதி வைப்பர்; வான நாடர்; மடமான் இடம் உடையர்; மாதராளைப் பங்கில் மிக வைப்பர்; பால் போல் நீற்றர்; பளிக்குவடம் புனைவர்; பாவநாசர்; சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர்; சரிதை பல உடையர்; தன்மை சொல்லின், எங்கும் பலி திரிவர்; என் உள் நீங்கார்-இடைமருது மேவி இடம்கொண்டாரே. |