185தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்;
    சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்;
மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்;
   வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்;
துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் 
         தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்;
பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும்-
    பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.