507 | பரத்தானை; இப் பக்கம் பல ஆனானை; பசுபதியை; பத்தர்க்கு முத்தி காட்டும் வரத்தானை; வணங்குவார் மனத்து உளானை; மாருதம், மால், எரி, மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் சரத்தானை; சரத்தையும் தன் தாள்கீழ் வைத்த தபோதனனை; சடாமகுடத்து அணிந்த பைங்கண் சிரத்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே. |