Try error :java.sql.SQLException: Closed Resultset: next
889தலை ஏந்து கையானை, என்பு ஆர்த்தானை, சவம் தாங்கு
                           தோளானை, சாம்பலானை,
குலை ஏறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோள்
           நாகம் அசைத்தானை, குலம் ஆம் கைலை-
மலையானை, மற்று ஒப்பார் இல்லாதானை, மதி கதிரும்
                       வானவரும் மாலும் போற்றும்
கலையானை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை,
                    கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.