460 | பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை, பவளக்கொழுந்தினை, மாணிக்கத்தின் தொத்தினை, தூ நெறி ஆய் நின்றான் தன்னை, சொல்லுவார் சொல் பொருளின் தோற்றம் ஆகி வித்தினை, முளைக் கிளையை, வேரை, சீரை, வினை வயத்தின் தன்சார்பை, வெய்ய தீர்க்கும் அத்தனை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!. |