545 | மின் உருவை; விண்ணகத்தில் ஒன்று ஆய், மிக்கு வீசும் கால் தன் அகத்தில் இரண்டு ஆய், செந்தீத்- தன் உருவில் மூன்று ஆய், தாழ் புனலில் நான்கு ஆய், தரணிதலத்து அஞ்சு ஆகி, எஞ்சாத் தஞ்ச மன் உருவை; வான் பவளக்கொழுந்தை; முத்தை; வளர் ஒளியை; வயிரத்தை; மாசு ஒன்று இல்லாப் பொன் உருவை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. |