Try error :java.sql.SQLException: Closed Resultset: next
596வீடுதனை மெய் அடியார்க்கு அருள் செய்வாரும்,
     வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும்,
கூடலர் தம் மூ எயிலும் எரிசெய்தாரும், குரை
          கழலால் கூற்றுவனைக் குமை செய்தாரும்,
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும்,
        ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும்,
வேடுவனாய் மேல் விசயற்கு அருள் செய்தாரும்
       வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.