651 | உரித்தவன் காண், உரக் களிற்றை உமையாள் ஒல்க; ஓங்காரத்து ஒருவன் காண்; உணர் மெய்ஞ்ஞானம் விரித்தவன் காண்; விரித்த நால் வேதத்தான் காண்; வியன் உலகில் பல் உயிரை விதியினாலே தெரித்தவன் காண்; சில் உரு ஆய்த் தோன்றி எங்கும் திரண்டவன் காண்; திரிபுரத்தை வேவ வில்லால் எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |