880தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்; தூநெறிக்கும் தூ
                             நெறி ஆய் நின்றார் போலும்;
பண்டு இருவர் காணாப் படியார் போலும்; பத்தர்கள் தம்
                             சித்தத்து இருந்தார் போலும்;
கண்டம் இறையே கறுத்தார் போலும்; காமனையும் காலனையும்
                                    காய்ந்தார் போலும்;
இண்டைச் சடை சேர் முடியார் போலும் இன்னம்பர்த் தான்
                                    தோன்றி ஈசனாரே.