961பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன்;
    புலித்தோல் உடை கண்டேன்; புணரத் தன்மேல்
மின் ஒத்த நுண் இடையாள் பாகம் கண்டேன்;
    மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன்;
அன்னத் தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை அலற
                அடர்த்திட்ட அடியும் கண்டேன்;
சின்ன மலர்க் கொன்றைக் கண்ணி கண்டேன்-
          சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே!.