784மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே;
            வண் கயிலை மா மலையை வந்தியாத,
நீலக் கடல் சூழ், இலங்கைக் கோனை
              நெரிய விரலால் அடர்த்தார் தாமே;
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே;
                 பழனை பதியா உடையார் தாமே;
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு
             ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.